“யாரும் யாருக்கும் அடிமை இல்லை”.. ஓபிஎஸ் ட்வீட்

கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தான் கொண்டாடி வருகிறது என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, பிப்-9

கடந்த 2005 ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகில் சுமார் 8.1 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஐக்கிய நாடுகள் நடத்திய கொத்தடிமை ஒழிப்பு மாநாட்டுக்கு பிறகு, கொத்தடிமை முறையை ஒழிப்பதற்காக இந்தியாவில் 1976ல் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதில் மீட்கப்படுவோர்க்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வேளாண் நிலம் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.ஆனால் இந்த சட்டத்தை முறையாக செயல்படுத்தாததால், தற்போது வரை இந்த கொத்தடிமை தொழிலாளர் முறை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் ட்விட்டர் பக்கத்தில், “கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் “கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை(பிப்-9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன்.“யாரும் யாருக்கும் அடிமை இல்லை” என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *