இந்திய முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன் .. குலாம் நபி ஆசாத் உருக்கம்

இந்திய முஸ்லீம் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய குலாம் நபி ஆசாத் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லி, பிப்-9

காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் குலாம் நபி ஆசாத் ஓய்வு பெறவிருப்பதை முன்னிட்டு மாநிலங்களவையில் இன்று பிரியாவிடை வழங்கப்பட்டது. பதவிக் காலம் நிறைவடையும் காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆஸாத் மாநிலங்களவையில் இன்று தனது கடைசி உரையை ஆற்றினார்.

குலாம் நபி ஆஸாத் பேசுகையில், நாட்டில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். அங்குள்ள சூழ்நிலைகளை பற்றி நான் கேள்விப்பட்ட போது ஒரு இந்திய முஸ்லீமாக எனக்கு பெருமை கொள்கிறேன். தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒழிய வேண்டும். எல்லையைக் காக்கும் வீரர்கள் நாட்டுக்காக உயிரிழப்பது எப்போது முடிவுக்கு வரும்? என கண்ணீர் மல்க பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *