டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!
குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று (பிப்.9) வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, பிப்-9

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய செய்திக்குறிப்பு வருமாறு:
”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 பதவிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் இட ஒதுக்கீட்டு விதி மற்றும் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்விற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஜன.3 அன்று நடந்த தேர்வில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் தேர்வெழுதினர். இதில் நேர்காணல் மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்குத் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 3,752 பேர். இவர்களுக்கான நேர்காணல் மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு, மே. 28,29,30 தேதிகளில் நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்காகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) அரசு கேபிள் டிவி நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய நாட்கள் என வரும் 16-ம் (16/2/2021) தேதி முதல் மார்ச் 15 (மாலை 5.45 வரை) பதிவேற்றலாம்”.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.