சசிகலாவிற்கு கார் கொடுத்த எஸ்.ஆர்.சம்பங்கி உள்ளிட்ட 7 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

சசிகலாவிற்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர் உள்பட 7 பேரை அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சென்னை, பிப்-8

பெங்களூரில் இருந்து நான்கு ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு சென்னை திரும்பும் சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் பயணம் செய்யக்கூடாது என காவல்துறை நோட்டீஸ் வழங்கிய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி என்பவர் கட்சிக் கொடி கட்டிய அவரது காரை சசிகலா பயனம் செய்ய வழங்கினார்.

இந்நிலையில், சசிகலாவிற்கு வரவேற்பு வழங்கியதற்காக எஸ்.ஆர். சம்பங்கி உள்பட 7 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் கூடிய காரை கொடுத்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் சம்பங்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதேபோல், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக திருவள்ளூர் கிழக்க மாவட்டக் கழக துணைச் செயலாளர் டி.தட்சணாமூர்த்தியும் நீக்கப்பட்டார். இவர்களைத் தவிர கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர் சந்திரசேகர ரெட்டி என்ற போகி ரெட்டி, ஒன்றிய கழக மாவட்டப் பிரதிநிதி ஜானகி ரவீந்திர ரெட்டி, கொம்மேப்பள்ளி ஊராட்ச்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பிரசாந்த் குமார், ஒன்றிய இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறைத் தலைவர் நாகராஜ், சிங்கிரிப்பள்ளி, சூளகிரி மேற்கு ஒன்றியம் ஆனந்த் ஆகியோர் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *