சசிகலாவுக்கு தமிழக எல்லையில் அமமுகவினர் உற்சாக வரவேற்பு! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ##TNwelcomesசின்னம்மா ஹேஷ்டேக்!!

பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி கட்டிய வேறு காரில் வரும் சசிகலாவுக்கு எல்லையில் அமமுக-வினர் வரவேற்பு அளித்தனர். சசிகலா தமிழகம் வருவதையொட்டி ட்விட்டரில், #SasikalaReturns, #TNwelcomesசின்னம்மா, #WelcomeRajamadha ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

சென்னை, பிப்-8

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை திரும்புவார் என ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா தற்போது தமிழக எல்லை பகுதியை வந்தடைந்திருக்கிறார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா மீண்டும் தமிழகம் திரும்பியிருக்கிறார். காரில் அதிமுக கொடியுடன் தமிழக எல்லையான ஜூஜூவாடி வந்த சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதி அருகே அதிமுக கொடியுடன் வந்து கொண்டிருந்த நிலையில், சசிகலாவின் காரில் இருந்து அதிமுக கொடி திடீரென அகற்றப்பட்டது.

தொடர்ந்து, கொடி அகற்றப்பட்டு வேறு ஒரு காரில் அதிமுக கொடியுடன் சசிகலா தமிழக எல்லையை வந்தடைந்தார். அவருக்கு அமமுக தொண்டர்கள் மலர்தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக எல்லையில் ஆங்காங்கே முகாமிட்டு தொண்டர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர். கர்நாடக மாநில எல்லையில் இருக்கக்கூடிய ஆஞ்சிநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சசிகலா வேறு வாகனத்திற்கு மாறியிருக்கிறார். சசிகலாவின் வாகனத்தை தொடர்ந்து 5 வாகனங்கள் மட்டுமே வரவேண்டும்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். தொடர்ச்சியாக இந்த பகுதியில் இருந்து அவர் செல்லக்கூடிய கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வரை 13 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சென்னை வந்ததும் சசிகலா, எம்.ஜி.ஆர் இல்லமான ராமாவரம் தோட்டத்திற்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சாலை மார்க்கமாக வரும் சசிகலாவை வரவேற்க பலர் காத்திருக்கும் நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில், #SasikalaReturns, #TNwelcomesசின்னம்மா, #WelcomeRajamadha ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *