சசிகலா காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்..! அதிமுக கொடியுடன் கூடிய வேறு காரில் புறப்பட்டார், சசிகலா!!
ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது. சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டதை அடுத்து அதிமுக கொடியுடன் கூடிய வேறு ஒரு காரில் சசிகலா பயணிக்கிறார்.
ஓசூர், பிப்-8

பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா இன்று தமிழகம் புறப்பட்டார். சென்னை புறப்படும்போது பெங்களூவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி சசிகலா, டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினர். அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆன இளவரசியும் காரில் சென்னை திரும்புகிறார்.
சென்னை வரும் சசிகலாவுக்கு தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை சாலையின் இருமருங்கிலும் அமமுகவினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க உள்ளனர்.
பெங்களூருவில் இருந்து அவர் பயணிக்கும் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, காரில் உள்ள அதிமுக கொடியை போலீஸார் அகற்றினர். இதனால் சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் பயணிக்கிறார்.
அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக சசிகலாவுக்கு போலீஸ் நோட்டீஸ் வழங்கியது. ஒசூர் அருகே சசிகலா வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் போலீசிடம் இருந்து நோட்டீஸை பெற்றுக் கொண்டார். நோட்டீஸ் அளித்த நிலையில் சசிகலாவின் காரில் இருந்து கொடியை போலீசார் அகற்றவில்லை.