பட்டேலின் 144-வது பிறந்தநாள் விழா: அரசியல் தலைவர்கள் மரியாதை…

அக்டோபர்-31

சர்தார் வல்லபாய் பட்டேலின் 144ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, டெல்லி மற்றும் குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரரான சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படுகிறார். அவரது பிறந்தநாள் விழா, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள, பிரம்மாண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை மோடி பார்வையிட்டார். ஒற்றுமை உறுதிமொழி ஏற்பையும் அவர் செய்துவைத்தார்.

துணை ராணுவப் படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடிப்பதுபோன்ற நிகழ்ச்சிகளும் நடத்திக் காட்டப்பட்டன. முன்னதாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அந்த வகையில், பட்டேலின் 144ஆவது பிறந்தநாள் விழா, இன்று ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, டெல்லி பட்டேல் சதுக்கத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினர். உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 

இதைத் தொடர்ந்து, டெல்லி தயான்சந்த் மைதானத்தில் நடைபெற்ற தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் மாரத்தான் ஓட்டத்தை அமித்ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாணவ மாணவியர்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று ஓடினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *