சென்னையில் உள்ள இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடைமை

சென்னையிலுள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்-7

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாளை இருவரும் சென்னை திரும்ப இருக்கிறார்கள்.

இந்நிலையில், இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை எதிர்த்து அரசுத்தரப்பு உச்சநீதிமன்ற மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், சென்னையிலுள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி சென்னை டிடிகே சாலையில் ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு சொத்து, வாலஸ் தோட்டத்தில் உள்ள 5 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *