வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்.2 வரை கால அவகாசம்.. விவசாயிகள்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லி, பிப்-6

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி, விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று வன்முறை நடந்த செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயிகள் சங்க நிர்வாகி ராகேஷ் திகாய்ட் கூறுகையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய அக்டோபர் 2 ஆம் தேதி வரை அரசுக்கு அவகாசம் அளித்துள்ளோம். அக்டோபர் 2ம் தேதிக்கு பின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்து விவசாயிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். நாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க மாட்டோம், நிர்பந்தத்தின் பேரில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார்.