அதிமுக ஆட்சியை ஸ்டாலின்தான் வழிநடத்துகிறார்.. உதாரணங்களை அடுக்கிய ஆ.ராசா!

சென்னை, பிப்-6

சென்னை, ஓட்டேரியில் திமுக சார்பில் இன்று (பிப்.6) பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவிலே மதசார்பற்ற ஒரு நல்லிணக்கம் கொண்டு வந்து பாடுபடுகின்ற தலைவர் நமது தலைவர் மு. க ஸ்டாலின் தமிழகத்தில் முதலமைச்சராக மட்டுமில்லாமல் இந்திய கண்டத்திற்கு அவர் உரிய தலைவராக தனது பயணத்தை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறார்.

தனது 23 வயதில் திருமணம் ஆனவுடன் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து படிப்படியாக பல்வேறு பதவிகளை ஏற்று இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார். அப்பேர்ப்பட்ட ஒரு தலைவர் இன்றைக்கு இந்திய நாடு முழுமைக்கும் ஒரு சிறந்த தலைவராக ஒரு சிறந்த சக்தியாக விளங்கி கொண்டிருக்கிறார். சட்டப்பேரவையில் அண்ணா காமராஜர் உள்ளிட்டோர் படம் வைக்கப்பட்டுள்ளது, திடீரென்று சட்டப்பேரவையில் உச்ச நீதிமன்றமே குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு அதற்கான தண்டனை வழங்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம் அங்கே இருப்பதை கண்டு வியந்து போனேன்.

பேரறிஞர் அண்ணா கர்மவீரர் காமராஜர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உள்ளிட்டோர் புகைப்படம் இருக்கும் வரிசையில் எவ்வாறு அங்க திறக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்வாரா. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் இன்றைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குரலை பதிவு செய்து மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஏன் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த கனவை திமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திமுக தலைவர் இந்த ஆட்சியை வழிநடத்தக் கூடிய ஒரு முதல்வராக செயல்பட்டு வருகிறார், திமுக தலைவர் என்வெல்லாம் சொல்கிறாரோ அதை எல்லாம் தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அறிவுரையாக ஏற்றுக்கொண்டு அதையெல்லாம் செய்து கொண்டு வருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் இருந்த காலகட்டத்தில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று சொன்னார், அது நடந்தது. அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான செலவை அரசு ஏற்க வேண்டும், அரசு ஏற்காவிட்டால் திமுக ஏற்கும் என்ற ஒரு அறிவிப்பை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். தலைவர் ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். சொந்த புத்தியில் அல்ல, ஸ்டாலின் தந்த புத்தியை வைத்துத் திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறீர்கள். உங்கள் சுய அறிவுக்கு எதுவும் தோன்றவில்லை.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொடுத்தீர்களே? யார் சொன்னபிறகு கொடுத்தீர்கள்? நீங்களாகவே கொடுத்தீர்களா? ஸ்டாலின் 10 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டதால், 7.5 சதவீதம் கொடுத்தீர்கள்.

பொது மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னது யார்? பொங்கலுக்கு ரூ.2,500 கொடுத்தீர்கள். ஸ்டாலின் வைக்கிற கோரிக்கைகளைப் பார்த்துத்தான் உங்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இதன்மூலம் இந்த ஆட்சியை வழிநடத்துவது நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) அல்ல ஸ்டாலின்தான் என்பது தெரிய வருகிறது’’

என்று ஆ.ராசா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *