உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம்

சென்னை, அக்டோபர்-30

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். வரும் நவ.13க்குள் பதவியேற்றுக் கொள்ளவும் சஹி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமாணியை, மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரமானி வேண்டுகோள் விடுத்தார். கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தஹில்ரமானி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, மூத்த நீதிபதி கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் அமரேஸ்வர் பிரதாப் சஹியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஏற்று கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சஹியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்ததுடன், வரும் நவ.13க்குள் பதவியேற்றுக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *