கோவையில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை.. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடக்கி வைத்தார்!
கோவை, பிப்-6

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்தில் ரூ.12 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.


பின்னர், விளாங்குறிச்சி பகுதியில் ரூ.131.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தையும், சரவணம்பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மற்றும் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.63.30 லட்சம் மொத்தம் ரூ.78.30 லட்சம்
மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


இதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாகராட்சி கிழக்கு மண்டலத்தில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 32வது வார்டு மற்றும் 37 வார்டுக்குட்பட்ட பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொடிசியா சாலை, அவினாசி சாலை முதல் எஸ்.பெண்ட் வரை மற்றும் குமுதம் நகர் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலையை புதுப்பிக்கும் பணிக்கும், விளாங்குறிச்சி சாலை மகேஷ்வரி நகர் முதல் மாநகராட்சி எல்லை வரை மற்றும் சேரன் மாநகர் பிரதான சாலையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பிக்கும் பணிக்கும், சேரன் மாநகரில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் மலா அவென்யூ மற்றும் சக்தி நகரில் தாாசாலை புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினை, ஆகமொத்தம் ரூ.12 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டிலான தார் சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினை அமைச்சர் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வையம்பாளையம் கிராமத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சிகளில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, ‘உழவர் பெருந்தலைவர்’ ஐயா சி.நாராயணசாமி நாயுடு அவர்களின் 96வது பிறந்தநாளையொட்டி, கோவை மாவட்டம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வையம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி, அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை செலுத்தினார்.


