அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை, பிப்-6

பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்யும் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என யுஜிசி தெரிவித்திருந்தது. பின்னர் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் அரியர் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கினார். மேலும் அரியர் தேர்வு அட்டவணை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆகியவற்றின் விதிகளுக்கு முரணானது என்று ஏஐசிடிஇ எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கான பொறியியல் தேர்வுக் கால அட்டவணையை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. முதல்கட்டமான அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,சென்னை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரிக்கான அரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதிவரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரியர் தேர்வுக் கால அட்டவணையை https://acoe.annauniv.edu/Home/ug_tt இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்..

இதனிடையே, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *