தமிழகத்தில் உடல்நலக்குறைவு, விபத்துகளால் உயிரிழந்த 50 காவலர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்த 50 காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, பிப்-6

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்.6) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரியலூர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த விஜயகுமார், செங்கல்பட்டு பெருநகர் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த பன்னீர் செல்வம்.

சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஆரோக்கியசாமி. மகாகவி பாரதியார் நகர் தலைமைக் காவலர் ஹரிதாஸ், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையின் சிறப்பு உதவி ஆய்வாளர் சுகுமாறன், நீலாங்கரை போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன், கானாத்தூர் சட்டம்-ஒழுங்குப் பிரிவு முதல் நிலை காவலர் செந்தில்குமார்.

சென்னை காவல் பாதுகாப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் எல்லப்பன், வீராபுரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர் தமிழ்க்குமரன்.

கோவை ஆயுதப்படை தலைமைக் காவலர் பேச்சிமுத்து; போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், கடலூர் முதுநகர் தலைமைக் காவலர் மனோகரன், ஈரோடு பவானிசாகர் தலைமைக் காவலர் சின்னராஜ்.

காஞ்சிபுரம் ஒரகடம் பெண் தலைமைக் காவலர் பவானி, கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி சிறப்பு உதவி ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி, கரூர் தென்னிலை தலைமைக் காவலர் கணேஷ் பாண்டியன், கிருஷ்ணகிரி தனிப்பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளர் விஸ்வநாதன், மதுரை சாப்டூர் காவலர் சோலைமலைக்கண்ணன்; ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் ஏ.எஸ். கண்ணன், நாகப்பட்டினம் மணல்மேடு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன்.

புதுக்கோட்டை மணல் மேல்குடி முதல் நிலைக் காவலர் ஜவஹர்லால் நேரு, ராமநாதபுரம் சத்திரக்குடி சிறப்பு உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, திருவாடானை நெடுஞ்சாலை காவல் ரோந்துப் பிரிவு தலைமைக் காவலர் ராஜா.

சேலம் கொளத்தூர் தலைமைக் காவலர் சதாசிவம்; வாழப்பாடி சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், திருச்சிகண்டோன்மென்ட் அனைத்து மகளிர் சிறப்பு உதவி ஆய்வாளர் ஹெலன் ரூபி, பொன்மலை சிறப்பு உதவி ஆய்வாளர் முனுசாமி,

திருச்சி லால்குடி உதவி ஆய்வாளர் மனோகரன், தென்காசி ஆலங்குளம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு உதவி ஆய்வாளர் மாரியப்பன், கும்பகோணம் போக்குவரத்து விசாரணை பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் வீரமணி, நீலகிரி ஆயுதப்படைப் பிரிவு தலைமைக் காவலர் சுரேந்திரன், திருநெல்வேலி தலைமைக் காவலர் ஹரிகிருஷ் ணன், மாஞ்சோலை தலைமைக் காவலர் சாமுவேல் பாண்டியராஜன்.

திருப்பூர் வெள்ளக்கோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலமுருகன், அனுப்பர்பாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணி, விழுப்புரம் கஞ்சனூர் உதவி ஆய்வாளர் சிவசங்கர், விருதுநகர் எம்.புதுப்பட்டி உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

திருப்போரூர் தலைமைக் காவலர் மூர்த்தி, சென்னை ஆயுதப்படை காவலர் தமிழ்ச்செல்வன், பண்ருட்டி போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன், மதுரை செல்லூர் தலைமைக் காவலர் சசிகுமார், மீனாட்சி அம்மன் கோவில் சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், சிவகங்கை நெற்குப்பை சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன், தஞ்சாவூர் ஆயுதப்படை காவலர் காளிமுத்து, திருப்பூர் மங்களம் சிறப்பு உதவி ஆய்வாளர் யோகமுரளி; திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி காவலர் பிரபாகரன், தூத்துக்குடி மாசார்பட்டி உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன்.

விருதுநகர் மாரனேரி சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பாராஜ், நத்தம்பட்டி முதல் நிலை காவலர் கார்த்திக் பாண்டியன் ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *