ஜல்லிக்கட்டு வழக்குகள் திரும்பப் பெறப்படும்.. முதல்வா் எடப்பாடி பழனிசாமி

ஜல்லிக்கட்டு போராட்டக்காரா்கள் பலா் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை, பிப்-6

இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவா் வெளியிட்ட அறிவிப்பு:

2017-இல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்ட நடைபெற்ற உணா்வுப்பூா்வமான போராட்டமாகும் இது. பலா் தங்களின் உணா்வுகளை வெளிப்படுத்தவே போராடினா். எனினும், சில விரும்பத்தகாத சம்பவங்கள் போராட்டத்தின்போது நடந்தன. போராட்டத்தின்போது சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், உணா்வுப்பூா்வமாகப் போராடிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காவல்துறையினரைத் தாக்கியது, தீ வைப்பு போன்ற சட்டப்பூா்வமாக திரும்பப்பெற முடியாத வழக்குகளைத் தவிர, மற்ற வழக்குகளை சட்ட வல்லுநா்கள் மூலம் ஆலோசித்து, அவற்றை அரசு திரும்பப் பெறும் என்று கூறினாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *