திமுகவை தேர்தலில் வீழ்த்த அனைவரும் ஒன்றாக எதிர்க்கணும்.. டிடிவி தினகரன்

தேர்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை, பிப்-4

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அரசியலில் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஜெயலலிதாவை பழிவாங்க, சட்டத்தின் பெயரால் அவரும், சசிகலாவும் வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். தற்போது சசிகலா புடம் போட்ட தங்கமாக மீண்டெழுந்திருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அவர் வரும் 8ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார். அந்த நாளை, திருவிழாவைப் போல கொண்டாட தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். 10 ஆண்டுகளாக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் திமுகவை, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தலையெடுக்கவிடாமல் செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களான அனைவரும் ஒற்றுமையோடு, சசிகலாவின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான திமுகவை தேர்தலில் வீழ்த்துவதை ஒரே நோக்கமாக கொண்டு, அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்’என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *