ரூ.200 கோடி வசூல் குவித்த விஜய்யின் ”பிகில்”

சென்னை, அக்டோபர்-30

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி-விஜய் கூட்டணியில் இந்தப் படம் வெளியானது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 4200-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் 5 நாட்கள் முடிவில் ரூ.200 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

இதனை முன்னிட்டு ட்விட்டரில், #BigilHits200CRs என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. எனினும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பிகில் பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி வெளியான இப்படம் 5 நாட்களில் ரூ.200 கோடி வரையில் வசூல் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *