சந்திரயான் 2 திட்டம் வெற்றி அடையும்-சிவன் நம்பிக்கை

பெங்களூரு, செப்டம்பர்-6

நாளை அதிகாலையில் நிலவில் தரையிரங்க இருக்கும் சந்திரயான் -2 வில் இனி எந்த தவறுகளும் நடக்காது என்றும், உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த திட்டம் நிச்சயம் வெற்றியடையும் என இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் ஆக.20-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2-ம் தேதி, முக்கிய நிகழ்வாக சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. அதன்படி சந்திரயானின் லேண்டர் பகுதி, நாளை அதாவது செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் தரையிறங்க உள்ளது. இதன் மூலம், நிலவின் தென்பகுதியில், விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெறவுள்ளது.


இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சந்திரயான்- 2 நிலவில் தரையிறங்குவதை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து பிரதமர் மோடி பார்க்க உள்ளார். இந்நிலையில், லேண்டரை தரையிறக்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக சிவன் கூறியுள்ளார். சந்திரயான்-2 திட்டத்தில் இனி எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை என்று கூறிய இஸ்ரோ தலைவர் சிவன் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் சந்திரயான்-2 திட்டம் நிச்சயம் வெற்றியடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *