அதிக தொகுதிகளை ஒதுக்காவிட்டால் 3வது அணி அமைப்போம்.. சரத்குமார் அதிரடி

அதிமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் மூன்றாவது அணி அமைப்போம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, பிப்-4

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஏற்கனவே அதிக தொகுதிகளை கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் அதிமுக கூட்டணியில் ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்களை கொடுத்தால் அந்த தொகுதிகளை நாங்கள் பெற மாட்டோம் என்றும் ஒரு சில தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதற்கு நாங்கள் கட்சி நடத்தவில்லை என்றும் நாங்கள் கேட்கும் தொகுதிகளை தராவிட்டால் மூன்றாவது அணி அமைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், எம்.கே.பி.நகரில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற சரத்குமார் கூறியதாவது:-

தி.மு.க. 1996ல் ஆட்சி அமைக்க நான் தான் முக்கிய காரணம்; யாராலும் மறுக்க முடியாது. அப்போது கருணாநிதியிடம் 50 சீட்டு கொடுங்கள் என்று கேட்டு ஒரு இயக்கத்தை துவக்கி இருந்தால் இன்று நாம் தான் முதல்வராக இருந்திருப்போம்.இப்போ இல்லை என்றால் எப்போவுமே இல்லை’ என்ற ரஜினியின் கருத்தை நான் பின்பற்றுகிறேன். தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். கூட்டணி பேச்சில் இரண்டு மூன்று சீட்டுகள் ஒதுக்கினால் போட்டியிட மாட்டோம்; மூன்றாவது அணி அமைப்போம். கட்சியின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 3ல் நடைபெற உள்ளது. அதில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *