தங்கம் விலை உயர்வு

சென்னை, அக்டோபர்-30

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து, கிராம் 3,664 ரூபாய்க்கும், சவரன் 29,312 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு 29,224 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3,664 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 29,312 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் காணப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி 49.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 49,700 ரூபாயாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *