ரூ.2,472 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

2,472 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.மேலும், 1,137 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திட்டங்களை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை, பிப்-4

இதுதொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரைக் கொண்டு, 108 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீரனூர், நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகள், பழனி மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியங்களைச் சார்ந்த 253 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்,

ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தைச் சார்ந்த 38 ஊரகக் குடியிருப்புகளுக்கு 11 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்,

வேடசந்தூர் ஒன்றியத்தைச் சார்ந்த 84 ஊரகக் குடியிருப்புகளுக்கு 12 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்,

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தைச் சார்ந்த 63 ஊரகக் குடியிருப்புகளுக்கு 17 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டம்,

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஒன்றியத்தைச் சார்ந்த ரெட்டியார்பட்டி மற்றும் 63 ஊரகக் குடியிருப்புகளுக்கு 28 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டம்,

ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகராட்சியில் 484 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தனிக் குடிநீர்த் திட்டம்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 108 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தித் திட்டம்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் 104 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திருப்பத்தூர் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம்,

நாமக்கல் மாவட்டத்தில் 55 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ராசிபுரம் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம்,

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் பள்ளிக்கரணையில் 61 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் பெருங்குடியில் 20 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம்,

பேரூராட்சிகள் இயக்குநரகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலகக் கட்டடம்,

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் மாருதி நகரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி,

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம்,

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் உப்பனாற்றின் குறுக்கே 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பேரூராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட வார சந்தை,

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பேரூராட்சியில் 1 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடம்,

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர் பேரூராட்சியில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம்,

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சியில் 59 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டம்,

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில், அரசு மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறுகிய கால தங்கும் விடுதி,

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம்,

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகராட்சியில், பேட்டை – பழைய பேட்டை இணைப்பு சாலையில் 14 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில், 23 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி தெரு மின்விளக்குகள்,

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை, தண்டையார்ப்பேட்டை, தொற்று நோய் மருத்துவ வளாகத்திற்குள் 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடற்றோர்களுக்கான சிறப்பு காப்பகம்,

அம்பத்தூர், பாடியில் உள்ள டிஎம்பி நகரில் 7 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சமுதாய நல மையம்,

அடையாறு, பக்கிங்காம் கால்வாய் கரையில், கேன்சர் இன்ஸ்டியூட் பின்புறம் 1 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா

என மொத்தம் 1,137 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் 1,752 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 8 பேரூராட்சிகள் மற்றும் 11 ஒன்றியங்களைச் சார்ந்த 2452 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளுக்கான மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர் மற்றும் இடங்கணசாலை பேரூராட்சிகள் மற்றும் வீரபாண்டி, பனமரத்துப்பட்டி மற்றும் சேலம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 778 ஊரகக் குடியிருப்புகளுக்கு 652 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 73 குடியிருப்புகளுக்கு 22 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த என்னேகொல்லு மற்றும் 122 குடியிருப்புகளுக்கு 31 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

பேரூராட்சி இயக்குநரகம் சார்பில், தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் பேரூராட்சியில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள்;

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் 8 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நவீன காய்கறிச் சந்தை அமைக்கும் பணிகள்;

என மொத்தம் 2,472 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சி இயக்குநரக புதிய திட்டப் பணிகளுக்குத் தமிழ்நாடு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை மாநகரில் இணைக்கப்பட்ட திருவொற்றியூர், சூரப்பட்டு, புத்தகரம், கதிர்வேடு, மாதவரம், அம்பத்தூர், நொளம்பூர், மதுரவாயல், உள்ளகரம் – புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 1,53,546 வீடுகளுக்கு கழிவுநீர் வீட்டிணைப்பு வழங்குவதற்கான இல்லந்தோறும் இணைப்பு திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை மாநகரில் உள்ள 200 பகுதிகளில் நிலத்தடி நீர் மட்ட அளவையும், நீரின் தரத்தையும் அறிந்துகொள்ள 6 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள எண்முறை தானியங்கி நிலத்தடி நீர்மட்ட அளவுமானி மற்றும் சென்னை மாநகர் முழுவதும் பரவலாகப் பெய்யும் மழைப் பொழிவின் அளவினைக் கணக்கிட 52 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மழை அளவுமானி கருவி ஆகிய கருவிகளின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சீர்மிகு திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் உள்ள வாகன நிறுத்தப் பகுதிகளை முழுமையாகப் பயன்படுத்துதல், வாகன நிறுத்த வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாகன நிறுத்த விதிகளை முறையாகச் செயல்படுத்தும் வகையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டங்களைப் பெருநகர சென்னை மாநகராட்சி முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன் முதற்கட்டமாக அண்ணாநகர், தியாகராயநகர் மற்றும் பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் முதல்வர் இன்று வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இதன் மூலம் முறையான வாகன நிறுத்தத்திற்கான வசதிகள் மேம்படுத்தப்படும் மற்றும் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைக்கப்படும்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *