மூக்கை உடைத்த ரசிகர்கள், கதறி அழுத நடிகை!!!
மலப்புரம், அக்டோபர்-30
சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க வந்த நடிகையின் மூக்கை ரசிகர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற நடிகை நூரின் ஷெரீப் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் இடத்தில் புதிய சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க நூரின் அழைக்கப்பட்டு இருந்தார். மாலை 4 மணிக்கு வர வேண்டிய நூரின் 6 மணிக்கு வந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் நூரின் வந்ததை பார்த்த உடன் அவரின் காரை சுற்றி வளைத்து சத்தம் போட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை நூரினின் மூக்கில் பலமாகபட்டது. இதனால் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நூரின் கதறி அழுதார்.
தாமதமாக வரவில்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டம் அதிகமாக கூட வேண்டும் என்பதற்காக, தன்னை அருகில் உள்ள ஓரு ஹோட்டலில் 2 மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் நூரின் விளக்கம் அளித்தார். நூரின் மூக்கில் ரத்தம் கொட்டி அவர் கதறி அழுகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.