முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, பிப்-4

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3ம் நாளான இன்று காலை 10 மணிக்கு கூடியது. தற்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, விவாதம் தொடங்கியிருக்கிறது. இதில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் பேரவையில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,’தமிழகத்தில் இதுவரை 1.33 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்க்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசி போட அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கருத்துருவுக்கு மத்திய அரசிடம் இருந்து விரைவில் சாதகமான பதில் வரும்.

சாதகமான பதில் வந்ததும் பத்திரிகையாளர்கள், 50 வயதானவர்களுக்கு வரும் வாரத்தில் தடுப்பூசி போடப்படும்.புதிதாக தொடங்கப்பட்டுள்ள 200 மினி கிளீனிக்கிற்கு ஒரு வாரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவர்.மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மருத்துவர், செவிலியர் நியமிக்கப்படுவர்.872 அம்மா மினி கிளினிக் துவங்கியதன் மூலம் 7,43,951 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி,’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *