கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம்.. சசிகலாவை சந்திக்க முயன்றதால் நடவடிக்கை!

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சசிகலாவை, கர்நாடக அதிமுக செயலாளர் எம்.பி. யுவராஜ் நேரில் சந்திக்க சென்றதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, பிப்-3

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். வருகிற 7-ந்தேதி சென்னை வருகிறார். அவரை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் சந்திக்க முயன்றதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் யுவராஜ் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஓபிஎஸ்- இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து பிறப்பித்துள்ளனர். மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு எதிராக செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *