நாடார் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஓபிசி பிரிவின் கீழ் கொண்டுவர கேரள அமைச்சரவை ஒப்புதல்
கேரள மாநிலத்தில் நாடார் சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் ஓபிசி பிரிவில் கீழ் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருவனந்தபுரம், பிப்-3

கேரள மாநில அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடார் சமூதாயத்தின் அனைத்து பிரிவுகளையும் ஓபிசி பிரிவின் கீழ் கொண்டுவர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் வகுப்பான கமிஷன் அளித்த பரிந்துரையை ஏற்று பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்து, தெற்கு இந்தியன் ஒருங்கிணைந்த தேவாலயம், லத்தின் கத்தோலிக்கர்கள் இடஒதுக்கீட்டின் கீழ் தனிப்பிரிவில் வருகிறார்கள். இவர்களைத் தவிர மலங்காரா, லுதெரன், மார்தோமொ சர்ச்களின் கீழ் உள்ள மற்ற பிரிவுகளில் உள்ளவர்கள் ஓபிசி பிரிவின் கீழ் வருவார்கள். அமைச்சரவை ஒப்புதலால் இவர்களின் நீண்ட கால கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தென் கேரளாவில் உள்ள குறைந்தது ஐந்து லட்சம் நாடார் சமூதாய மக்கள் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் பயன்பெற வாய்ப்புள்ளது. கேரளாவில் கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் இந்த முடிவை வரவேற்றுள்ளது.