அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

லாஸ் ஏஞ்சல்ஸ், அக்டோபர்-30

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலோவீன் நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் ஹாலோவீன் நிகழ்ச்சியானது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ந் தேதி கொண்டாடப்படும்.  அன்றைய தினம் விடுமுறை விடப்படும்.  இந்நிகழ்ச்சியில், பேய் விரட்டுவதற்காக அதனை போன்று முகமூடிகளை அணிந்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தெற்கே ஹாலோவீன் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திடீரென அங்கு துப்பாக்கி சூடு நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் தீயணைப்பு துறையால் மீட்கப்பட்டனர்.  இதில், சிகிச்சை பலனின்றி 3 ஆண்கள் உயிரிழந்தனர்.  மீதமுள்ள 9 பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *