எம்.பி., எம்எல்ஏ, அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் குறித்து கனவு காணாதீர்கள்.. மதிமுகவினருக்கு வைகோ அறிவுரை
எம்.பி., எம்எல்ஏ, அமைச்சர் உள்ளிட்ட கனவுகளை விட்டுவிடுங்கள் என்று மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியினரிடம் வைகோ பேசினார்.
சென்னை, பிப்-3

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று காலை மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை, எழும்பூர் தலைமையகம் தாயகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எழுவர் விடுதலை, வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தவர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் கூட்டத்தில் பேசிய வைகோ, ”பல்வேறு கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்திருந்தாலும் கொண்ட கொள்கையில் மதிமுக உறுதியாக உள்ளது. நிர்வாகிகள் பதவியை எதிர்பார்க்காமல் கட்சியின் கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும். எம்.பி., எம்எல்ஏ, அமைச்சர் உள்ளிட்ட கனவுகளை எல்லாம் விட்டுவிடுங்கள். உங்கள் ஊரில் இருந்துகொண்டு மதிமுக கொடியை ஏற்றிக் கொண்டிருக்கிறானே தொண்டன், அவனுக்கு அந்த ஆசை இருக்கிறதா என்பதை நினைத்துப் பாருங்கள்” என்று வைகோ தெரிவித்தார்.