பா.ஜ.க, எந்த மதத்திற்கும் எதிரான கட்சியல்ல… எல்.முருகன் பேட்டி

சென்னை, பிப்-3

சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையால் பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை அனைத்து மதத்தினரும் போற்றப்பட வேண்டும். யாரையும் இழிவுபடுத்தக்கூடாது. எந்த தனி நபர் மீதோ, எந்த சமுதாயங்கள் மீதோ தாக்குதல் கூடாது என்பது தான் எனது கருத்து. சசிகலா தமிழகம் வரட்டும். மாற்றம் வருமா என்பதை பின்னர் பார்ப்போம். நல்ல பட்ஜெட்டை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை. எந்த மதத்தையும், தனிநபரையும் கொச்சைப்படுத்த கூடாது. பா.ஜ.க எந்த மதத்திற்கும் எதிரான கட்சியல்ல. மதக்கலவரம் செய்ய திட்டமிடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *