தேமுதிக தலைமையில் 3-ஆவது அணி அமையும்.. விஜயகாந்த் மகன் பரபரப்பு

இதுவரை அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம், மக்கள் ஏற்றால் மூன்றாவது அணி அமைப்போம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி, பிப்-3

திருச்சியில் செய்தியாளர்களிடம் விஜய பிரபாகரன் கூறியதாவது:-

தேமுதிக இதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மாற்றம் வேண்டும் என்று ஏற்றுக்கொண்டால் தேமுதிக தலைமையில் 3-ஆவது அணி அமையும். எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்ட நிலையிலும், தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற வரலாறு உள்ளது. அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெறுவார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் அனைவருக்கும் முதல் தேர்தலாக இருக்கும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவருமே தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது. தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி, கூட்டணி குறித்தெல்லாம் கட்சித் தலைமை முடிவு செய்யும். மக்களுக்கு நல்லது செய்பவர்களுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *