கொரோனாவில் இருந்து குணமடைந்து அமைச்சர் காமராஜ் மறுபிறவி எடுத்துள்ளார்… விஜயபாஸ்கர் தகவல்
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தார்.
சென்னை, பிப்-3

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முதலில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆரம்ப கட்டத்தில் மோசமாக இருந்த அவரது உடல்நிலை பின்னர் தொடர் சிகிச்சையில் படிப்படியாக முன்னேற்றம் பெற்றது.
இந்நிலையில் காமராஜ் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘கொரோனாவில் இருந்து குணமடைந்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மறுபிறவி எடுத்துள்ளார். உடல்நிலையினைப் பொறுத்து அவர் இன்று மாலையோ அல்லது நாளை காலையோ டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என்று தெரிவித்துள்ளார்.