சசிகலா வரும் 7-ம் தேதி தமிழகம் வருவதால் கெமிக்கல் ரியாக்ஷன்.. டிடிவி தினகரன் பேச்சு
சசிகலா வரும் 7-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா விடுதலையால் தமிழகத்தில் கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்
மதுரை, பிப்-3

அமமுக அமைப்பு செயலாளர் இ.மகேந்திரனின் மகள் ஐஸ்வர்யா – ஆதித்த சிபிசக்கரவர்த்தி திருமண விழா மதுரை வேலம்மாள் மருத்துவக்க்கலுரி வளாகத்தில் நடைபெற்றது. மங்கள நாண் எடுத்துக் கொடுத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மணமக்கள் ஐஸ்வர்யா – ஆதித்த சிபிசக்கரவர்த்தி திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது;-
ஐஸ்வர்யா திருமணத்தில் பங்கேற்றது எனது மகள் திருமணத்தில் பங்கேற்று போன்ற உணர்வு ஏற்பட்டது. அம்மாவின் நல்லாசியுடன், சின்னம்மாவின் நல்வாழ்த்துக்களுடன் மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்து கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்; மகேந்திரன் போன்ற எண்ணற்ற விசுவாசிகளால்தான் சசிகலா வருகை எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவின் வருகையின் போது அம்மாவின் உண்மை தொண்டர்கள் ராணுவ வீரர்கள் போன்று அணிவகுத்து நிற்க வேண்டும். தமிழக எல்லையிலிருந்து அம்மா வீடு வந்து சேரும் வரை வழிநெடுகளிலும் வரவேற்கலாம். சசிகலாவை வரவேற்கும் போது கழகத்தினரால் யாருக்கும் இடையூறு ஏற்படக்கூடாது.
சசிகலா விடுதலையால் தமிழகத்தில் கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்பட்டுள்ளது. யார் தவறு செய்தவர்கள், யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை காலம் முடிவு செய்யும். தேர்தலில் தனித்து போட்டியா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
தமிழ்நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவோம். அஇஅதிமுகவை மீட்டு எடுப்பதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். ஜனநாயக ரீதியாக போராடி மக்கள் ஆதரவை பெற்று பெற்றி பெறுவோம் என கூறினார்.