பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை, பிப்-3

பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை திமுக அமைதி பேரணி நடைபெற்றது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த அமைதிப் பேரணிக்கு தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் உடன் சென்றனர். இந்த பேரணியில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணா நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.