தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர் “அண்ணா”.. ஓ.பி.எஸ். புகழாரம்

தமிழை சுவாசித்து தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர் அறிஞர் அண்ணா என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

சென்னை, பிப்-3

அறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்;
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்!

தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *