சிபிஎஸ்இ 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.

டெல்லி, பிப்-2

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அட்டவணையை வெளியிட்டார்.

அதில், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4-ந்தேதி பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகி ஜூன் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை தேர்வுகள் நடைபெறுகிறது.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4-ந்தேதி பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகி ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரையும், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

04-05-2021 காலை ஆங்கிலம்
15-05-2021 மதியம் தமிழ்
17-05-2021 காலை அக்கவுண்டன்சி
18-05-2021 காலை வேதியல்
24-05-2021 காலை உயிரியல்

25-05-2021 காலை பொருளியல்
31-05-2021 காலை இந்தி
01-06-2021 காலை கணிதம்
02-06-2021 காலை புவியியல்
10-06-2021 காலை வரலாறு
11-06-2021 காலை வேளாண்

சிபிஎஸ்இ 10 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

06-05-2021 காலை ஆங்கிலம்
10-05-2021 காலை இந்தி
11-05-2021 காலை தமிழ்
15-05-2021 காலை அறிவியல்
21-05-2021 காலை கணிதம்
27-05-2021 காலை சமூக அறிவியல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *