சி.ஏ. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் இசக்கிராஜாவுக்கு S.P.வேலுமணி வாழ்த்து!
சென்னை, பிப்-2

இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”சி.ஏ. எனப்படும் சார்ட்டட் அக்கவுண்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த மாணவர் திரு.இசக்கிராஜா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.