மதுபானங்கள் விலை பாட்டிலுக்கு ரூ.90 வரை அதிகரிப்பு… கேரளாவில் அதிரடி
கேரளாவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானங்கள் விலை பாட்டிலுக்கு ரூ.90 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம், பிப்-3

கேரள மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு 3ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது. பாட்டிலின் அடிப்படை விலையில் இருந்து 7தசவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ10 முதல் ரூ90 வரை உயர்ந்துள்ளது. ஒரு பாட்டிலின் விலை ரூ40 உயர்த்தி விற்கப்படும்போது, அவற்றில் ரூ35 அரசுக்கும், ரூ4 மதுபான கம்பெனிக்கும், ரூ1 பீவரேஜ் நிறுவனத்துக்கும் கிடைக்கும். அதுமட்டுமின்றி 750 மில்லிலிட்டர், 1½ மற்றும் 2½லிட்டர் மதுபானங்கள் பாட்டில்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.