காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம்-ஐரோப்பிய எம்.பி.க்கள்

ஜம்மு-காஷ்மீர், அக்டோபர்-30

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. அதில் நாங்கள் தலையிட போவதில்லை என ஐரோப்பிய எம்.பி. க்கள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நிலவும் சூழல் குறித்து அறிய ஐரோப்பிய எம்.பி. க்கள் 23 பேர் கொண்ட குழு இந்தியா வந்தது. காஷ்மீரில் சூழலை ஆய்வு செய்த பிறகு ஐரோப்பிய எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது அவர்கள், காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்திய அரசியலில் நாங்கள் தலையிட முடியாது. காஷ்மீரில் உள்ள அனைத்து பிரச்னைகளும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. பயங்கரவாதம் இந்தியாவின் பிரச்னை அல்ல. அது உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொண்டு வரும் பிரச்னை. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் நாங்கள் இந்தியாவின் பக்கம் இருப்போம்.

இந்திய அரசியலில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. சாமானிய மக்களை சந்திக்கவே வந்தோம். காஷ்மீர் மக்கள் வளர்ச்சியையும் அமைதியையுமே விரும்புகிறார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு நாங்கள் துணை நிற்போம். அவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகளை விரும்புகிறார்கள் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *