தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும்.. ஆளுனர் உரையில் அறிவிப்பு
இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது என்று பன்வாரிலால் புரோகித் கூறினார்.
சென்னை, பிப்-2

சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் ;-
கல்வி தொலைக்காட்சி மற்றும் 10 தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வாயிலாக, மாணவர்கள் பாடங்களை கற்கும் வண்ணம், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விலையில்லா மடிக்கணினிகள் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மடிக்கணியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்கள் வாயிலாகவும், பல்வேறு இணையதளங்கள் வாயிலாகவும், மின்னணு தொகுப்பில் பாடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் விளைவுகளை ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு அரசு இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.