டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு..!

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க 2021-22 மத்திய பட்ஜெட்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, பிப்-1

நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது;-

சமீப காலங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டத்திற்காக 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்க நிதி ஊக்கத்தை வழங்கும்.

2019ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையின்போது, ஒரு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (என்ஆர்எஃப்) தொடங்குவது குறித்து அறிவிக்கப்பட்டது. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. என்ஆர்எஃப் செலவினம் ஐந்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடியாக இருக்கும். நாட்டின் ஒட்டுமொத்த ஆராய்ச்சிக்கான சூழல் வலுப்பெறுவதை இது உறுதி செய்யும். புதிய முயற்சியாக தேசிய மொழிபெயர்ப்புப் பணி மேற்கொள்ளப்படும். மேலும் கணினித் துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *