மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.1.03 லட்சம் கோடியில் சாலைத் திட்டங்கள்

தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லி, பிப்-1

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் மேம்படுத்தப்படும். அந்த வகையில் கொச்சி மெட்ரோ பணிகள் விரிவாக்கத்துக்கு 1,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. செய்யப்படுகிறது. இந்திய ரயில்வே வழித்தடங்கள் மேம்பாட்டுக்கு மொத்தம் 1.10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னையில் 118 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படும். இதற்காக 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 13,000 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கூடுதலாக 11,500 கி.மீ. தூரத்துக்கு சாலைப் பணிகள் அமைக்கப்படும்.

அதனடிப்படையில் தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடத்திற்கான நெடுஞ்சாலை அமைக்க 1.03 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல மேற்கு வங்களத்துக்கு 25,000 கோடி ரூபாயும், கேரளாவுக்கு 65,000 கோடி ரூபாயும் நெடுஞ்சாலைப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை கொல்லம் வரை நவீன வசதிகளுடன் புதிய சாலைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *