இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்.. ஜனாதிபதியை நேரில் சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மத்திய நிதி நிலை அறிக்கையின் நகலை நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

டெல்லி, பிப்-1

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பட்ஜெட் அடங்கிய பையுடன் நிதித்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது பட்ஜெட் தாக்கல் தொடர்பாக ஜனாதிபதியிடம் நிதி அமைச்சர் எடுத்துரைத்தார். அப்போது மத்திய நிதி நிலை அறிக்கையின் நகலை ஜனாதிபதியிடம் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *