எகிப்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ”பிகில்”
நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான படம் பிகில். இந்தப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் பிகில் படம் இன்று எகிப்து நாட்டில் வெளியாகிறது என்கிற அறிவிப்பு வந்துள்ளது. இதுவரை அந்த நாட்டில் தமிழ் படம் எதுவும் வெளியானதில்லை. பிகில் படம் தான் அங்கு முதலில் ரிலீஸ் ஆகும் தமிழ் படம். இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.