விண்ணுக்கு அனுப்ப வீரர்கள் தேர்வு

பெங்களூரு, செப்டம்பர்-6

ககன்யான் திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு செல்லும் வீரர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கியது இஸ்ரோ.

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும், ககன்யான் திட்டத்தை, வருகிற 2022ம் ஆண்டு இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இதற்காக 2 ஆளில்லா விண்கலங்களும், மனிதர்களை சுமந்து செல்லும் ஒரு விண்கலமும் தயாரிக்கப்படவுள்ளது. ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ககன்யான் திட்டத்திற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ககன்யான் திட்டத்தின் கீழ் முதலில் 2 ஆளில்லா விண்கலன்கள் விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மூன்றாவதாக அனுப்பப்படும் விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் விண்ணுக்கு செல்லவுள்ளனர். இந்த நிலையில் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்காக வீரர்களை தேர்வு செய்யும் பணியை இஸ்ரோ தொடங்கியுள்ளது. பெங்களூருவில் உள்ள இன்ஸ்டியூட் ஆப் ஏரோ ஸ்பேஸ் மெடிசன்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை புகைப்படங்களை விமானப்படை வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கான முதற்கட்ட பரிசோதனை நிறைவடைந்திருப்பதாகவும் விமானப்படை அறிவித்துள்ளது.

உடல்திறன் தேர்வு மருத்துவம், மனோதிடம், ஆகியவைகள் குறித்து வீரர்களுக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 30 வீரர்களும் விமானப்படையை சேர்ந்தவர்கள் ஆவார். இவர்கள் 30 பேரும் ரஷ்யாவில் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதில் இருந்து சிறந்த மூன்று வீரர்களை தேர்வு செய்து விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *