ஆரம்பமே அதிரடி.. சசிகலா காரில் அதிமுக கொடி..!
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரூ, ஜன-31

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரூ ஜெயிலில் இருந்து வந்த சசிகலா கடந்த 27-ந்தேதி முறைப்படி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு இருந்ததால், தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மதியம் 12 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வந்தார். அவர் கார் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பல கார்கள் அணிவகுத்து வந்தன. சசிகலாவின் காரில் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டு இருந்தது.
ஏற்கனவே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த சசிகலா பின்னர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். அதற்கென தனி கொடியும் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று சசிகலா காரில் அ.ம.மு.க. கொடிக்கு பதிலாக, அ.தி.மு.க. கொடி பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தனது கட்சி அ.தி.மு.க.தான் என்பதை காட்டு வகையில் அவர் அ.தி.மு.க. கொடியை காரில் பறக்கவிட்டதாக கருதப்படுகிறது.