அ.தி.மு.க.வில் சசிகலாவையோ, அ.ம.மு.க.வையோ இணைக்க 100% வாய்ப்பு இல்லை… ஜெயக்குமார்
அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ வாய்ப்பில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னை, ஜன-30

அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பார் என நமது எம்ஜிஆரில் வெளியான கட்டுரை குறித்த கேள்விக்கு ஜெயகுமார் பதிலளிக்கையில், அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ 100 சதவீதம் வாய்ப்பில்லை. அதிமுக இரும்பு கோட்டை என்பதால் யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது. மனிதாபிமான அடிப்படையில் சசிகலா நலம்பெற வேண்டி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயதீப் நலம் விசாரித்தார் என்று ஜெயகுமார் கூறினார்.