இடைத்தேர்தலில் காங்., பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை-தேவகவுடா திட்டவட்டம்

பெங்களூரு, அக்டோபர்-30

கர்நாடகா மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என ஜனதா தள கட்சி மூத்த தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ் – ஜனதா தளம் (ஜே.டி.எஸ்.) கூட்டணி ஆட்சி 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் கவிழ்ந்தது. இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம். எல்.ஏ.க்கள் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று ஜனதா தள கட்சி மூத்த தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடக இடைத்தேர்தலில் ஜே.டி.எஸ். கட்சி தனித்து போட்டியிடவே விரும்புகிறது. காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளும் நம்பிக்கைக்கு உரியவை கிடையாது. ஒரே குணாதிசயங்களை கொண்டவை தான். இவ்வாறு தேவகவுடா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *