டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு நடைபெற்றதில் மூன்று கார்கள் சேதமடைந்தன.
டெல்லி, ஜன-29

டெல்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 கார்கள் சேதமடைந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் யாரும் காயமடையவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த சாலை மூடப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சோதனை செய்து வருகின்றனர். குண்டு வெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், தேவையான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.