சசிகலா மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும்.. ஓபிஎஸ் மகன் வாழ்த்து

சசிகலா மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழெக்கை வாழ வேண்டும் என்று ஓபிஎஸ்ஸின் இளையமகன் ஜெயபிரதீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேனி, ஜன-28

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா நேற்று (ஜன-27) விடுவிக்கப்பட்டாா். ஆனால் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டுள்ளதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சசிகலா மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெங்களூருவில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழக்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். (இது அரசியல் பதிவு அல்ல; என் மனதினில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு)’ என்று தெரிவித்துள்ளார்.

4 thoughts on “சசிகலா மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும்.. ஓபிஎஸ் மகன் வாழ்த்து

 • January 29, 2021 at 2:05 pm
  Permalink

  அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தியது சிறப்பு

  Reply
 • January 29, 2021 at 2:34 pm
  Permalink

  உங்களுக்கு தேவையான வார்த்தையை மட்டும் பிரிச்சு போடுறீங்க பார்த்தீங்களா லகுட பாண்டிகளா😏

  Reply
 • January 29, 2021 at 2:36 pm
  Permalink

  எல்லாரையுமே எப்போமே நல்லா இருக்கீங்களா சாப்டிங்களான்னு தான் விசாரிப்பாங்க அத தான் இவரும் செஞ்சிருக்காரு அத விட்டுட்டு அளந்து கட்டாதீங்க..

  Reply
 • January 29, 2021 at 6:42 pm
  Permalink

  உங்களுடைய கருத்துகளை வரவேற்கின்றோம்…சசிக்கல அவர்களுக்கு விரைவில் உடல் நலம் சரியாக வேண்டுகின்றோம்.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *