தமிழகம் முழுவதும் ஜனவரி 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகம் முழுவதும் வருகிற 31 ஆம் தேதி 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, ஜன-28

நடப்பு ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி 17-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கொரோனா தடுப்பூசித் திட்டம் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 31ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில், முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நெறிமுறைகள் மற்றும் வழிக்காட்டுதலை பின்பற்றி போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற வேண்டும். முகக்கவசம் அணிந்து, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை கழுவ வேண்டும். கூட்டமாக இருப்பதை தவிா்க்க வேண்டும். சொட்டு மருந்து கொடுக்கும் ஒவ்வொரு குழந்தையுடன் ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பெரியவா்கள், குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் முகாம்களில் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.