தேவர் ஜெயந்தி: அரசியல் தலைவர்கள் மரியாதை…

மதுரை, அக்டோபர்-30

முத்துராமலிங்க தேவரின் 112 வது ஜெயந்தி மற்றும் 57 வது குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மதுரையில் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு திமுக தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச்.ராஜா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *